Monday, September 2, 2013

தமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்....

தமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்....

TN-01 சென்னை மத்தி (அயனாவரம்)

TN-02 சென்னை மேற்கு (அண்ணா நகர்)

TN-03 சென்னை வட கிழக்கு (தண்டயார்பேட்டை)

TN-04 சென்னை கிழக்கு (பேசின் பிரிட்ஜ்)

TN-05 சென்னை வடக்கு (வியாசர்பாடி)

TN-06 சென்னை தென் கிழக்கு (மந்தவெளி)

TN-07 சென்னை தென் (திருவான்மியூர்)

TN-09 சென்னை மேற்கு (கே.கே. நகர் )

TN-10 சென்னை தென் மேற்கு (வளசரவாக்கம்)

TN-11 தாம்பரம் 

TN-16 திண்டிவனம் 

TN-18 செங்குன்றம் 

TN-19 செங்கல்பட்டு 

TN-20 திருவள்ளூர் 

TN-21 காஞ்சிபுரம் 

TN-22 மீனம்பாக்கம் 

TN-23 வேலூர் 

TN-24 கிருஷ்ணகிரி

TN-25 திருவண்ணாமலை 

TN-28 நாமக்கல்

TN-29 தர்மபுரி

TN-30 சேலம் (மேற்கு)

TN-31 கடலூர்

TN-32 விழுப்புரம்

TN-33 ஈரோடு

TN-34 திருசெங்கோடு

TN-36 கோபிசெட்டிபாளையம்

TN-37 கோயம்புத்தூர் (தெற்கு)

TN-38 கோயம்புத்தூர் (வடக்கு)

TN-39 திருப்பூர் (வடக்கு)

TN-40 மேட்டுபாளையம்

TN-41 பொள்ளாச்சி

TN-42 திருப்பூர் (தெற்கு)

TN-43 உதகமண்டலம்

TN-45 திருச்சிராப்பள்ளி

TN-46 பெரம்பலூர்

TN-47 கரூர்

TN-48 ஸ்ரீரங்கம்

TN-49 தஞ்சாவூர்

TN-50 திருவாரூர்

TN-51 நாகப்பட்டினம்

TN-52 சங்ககிரி

TN-54 சேலம் (கிழக்கு)

TN-55 புதுகோட்டை

TN-56 பெருந்துறை

TN-57 திண்டுக்கல்

TN-58 மதுரை (தெற்கு)

TN-59 மதுரை (வடக்கு)

TN-60 தேனீ

TN-61 அரியலூர்

TN-63 சிவகங்கை

TN-64 மதுரை (மத்திl)

TN-65 ராமநாதபுரம்

TN-66 கோயம்புத்தூர் (மத்தி)

TN-67 விருதுநகர்

TN-68 கும்பகோணம்

TN-69 தூத்துக்குடி

TN-70 ஓசூர்

TN-72 திருநெல்வேலி

TN-73 ராணிபேட்

TN-74 நாகர்கோயில்

TN-75 மார்த்தாண்டம்

TN-76 தென்காசி

TN-77 ஆத்தூர்

TN-78 தாராபுரம்

மேல இருக்கும் எண்களில் சில எண்கள் விடுபட்டுள்ளன, உதாரணம் 08, 17, 26, 35, 44, 53, 62, 71, 80... ஏன் என்றால் அவையின் கூட்டுத்தொகை 8.. வாகனங்களை பொருத்தவரை அவைகள் துரதிர்ஷ்டமாக கருத படுகிறது. 8 என்பது சனி பகவானின் எண்ணாக குறிப்பிடபடுகிறது. அதனால் தான் வாகன எண்ணின் கூட்டுத்தொகை எட்டு வந்தாலும் சிலர் வாங்க மறுகின்றனர்...

ஆனால் நம் முன்னோர்கள் வகுத்தது வேறு ஏதாவது காரணமாக கூட இருக்கலாம்.. உங்களுக்கு வேறு காரணம் தெரிந்தால் கூறுங்கள்... உண்மையை அறியப்பெருவோம்,...

நன்றி : தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்?

மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்? மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம்.

பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர்.

கொற்கையை ஆண்ட சடவர்மன் வீரபாண்டியன், இலங்கையில் போர்தொடுத்து வென்று, திரிகோணமலை பாறையில் மீன்கொடியை பொறித்தான். பிற்காலத்தில் டச்சுக்காரர்கள், அந்த பாறையை பெயர்த்தெடுத்து, தூய பெரடரிக் கோட்டை சுவர் மீது வைத்தனர். பாண்டிய மன்னர்கள் வாணிப செலாவணிக்காக காசுகளை அச்சடித்தனர். கொற்கை துறைமுகம் கடல்கோளால் சீரழிய, பழைய காயலுக்கு துறைமுகம் இடம்பெயர்ந்தது. இங்கும் கடல்கோளால் 4 கி.மீ., தூரத்தை கடல்கொண்டது. இப்படி அடிக்கடி ஏற்பட்ட கடல் கோள்களில் இருந்து தப்பிக்க, பாண்டியர் தலைநகரை மதுரைக்கு மாற்றினர். கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன். மதுரையை பாண்டியர்கள் ஆண்டாலும், கொற்கையை அவர்களது வாரிசுகள் ஆண்டனர். கொற்கை, பழைய காயலில் இருந்து பாண்டியர் தலைநகரம் மதுரைக்கு இடமாறியதை பிளினி போன்ற பேராசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். அழகர் கோவிலில் உள்ள பிராமி கல்வெட்டில் மதுரையை "மதிரய்' என சமணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கி.பி. 1310 முதல் பாண்டியர்களுக்கு சோதனை காலமானது. குலசேகர பாண்டியன் வாரிசுகள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இடையே வாரிசுரிமை போர் மூண்டது. இதை பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையில் படையெடுத்ததை தொடர்ந்து, கி.பி.1330 -78ல் முகமதியர் ஆட்சி நடந்தது. பின், விஜயநகர அரசர் குமார கம்பணன் மதுரையை வென்று ஆட்சியை நிறுவினார். இதைதொடர்ந்து நாயக்கர் ஆட்சி நடந்தது. 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல்லை பகுதிக்கு சென்ற பாண்டிய மன்னர்கள், தென்பாண்டி நாட்டை குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். கி.பி.17ம் நூற்றாண்டு வரை இவர்களது சந்ததியினர் கொற்கை, தென்காசி, கரிவலம் வந்தநல்லூரில் ஆட்சி செய்தனர். பாண்டியர் மன்னர்களில் கி.பி.1422 - 63 வரை ஆட்சி செய்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் குறிப்பிடத்தக்கவர். இவர் சேர மன்னனை வென்றார். தென்காசியில் கோயில் எழுப்பினார். 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இருந்தாலும், மதுரை என்றாலே "பாண்டிய நாடு' என்ற பெருமையை தந்தவர்கள் பாண்டிய மன்னர்கள்தான்.

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?

வைகையின் பெருமை !

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?

புகைப்படம்: வைகையின் பெருமை !

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார்.‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம். 

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)

#EngaMadurai

Saturday, March 2, 2013

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:
தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
கடாலன்------------ஸ்பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ
திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும்,கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன

Thursday, February 14, 2013

மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்

Photo: சில மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்....
இந்து மதமும் பகவத் கீதையின் கூற்று: 

நீயும் உன் குடும்பத்தாரும் இறைவனின் வழிபாட்டுக்காக வரும் நல்ல நாட்களில் விரதம் இரு! அப்போது உன் வீட்டில் அன்றைய தினம் சமையலுக்கு (சைவ உணவு) தேவைப்படும் உணவுப்பொருட்களை நீயும் உன் சுற்றத்தாரும் ஒரு கோவிலில் அந்த உணவுப்பொருட்களை சமைத்து அன்று மாலை ஏழை எளிய மக்களுடம் அந்த உணவை ஒரு நேரம் மட்டும் சேர்ந்து சாப்பிடு இதுதான் விரதம்!

இசுலாம் சொல்கிறது:

நீ இசுலாத்தின் கடமைகளாக வரும் நல்ல நாட்களில் பகல் நேரம் சாப்பிடாமல் இரவு வேளை மட்டும் சாப்பாடு சமைத்து வறியவர்களையும், ஏழைகளையும் சேர்ந்து உன் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு நேரம் சாப்பிடு! 

சிக் மதம்:

நீ பணக்காரனாக இருந்தால் ஏழைகளை அழைத்து ஒன்றாக சாப்பிடு! நீ பணக்காரனாக இருந்து கொண்டு நீ மட்டும் சாப்பிட்டு விட்டு ஏழைகளை பட்டினி போடாதே!

கிறிஸ்தவம்:

பணம் படைத்தவர்களிடம் பணம் பெற்று கிறிஸ்துவின் பெயரால் ஏழைகளுக்கு உணவளி!

பௌத்தம்:

புத்தனின் பெயர் சொல்லி வாறவர்களை அன்போடு ஆணை அவர்களுக்கு பசியோ தாகமோ எடுத்தால் இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு சற்றேனும் உணவும் தாகத்துக்கு தண்ணீரும் உறங்குவதற்கு இடமும் குடு!

இதில் எல்லா வர்க்கத்திலும் இன்றைய உலகம் எப்படி மாறி நடக்கிறது என்று சற்று எண்ணி பாருங்கள். 
- சிவம் கண்டர்

மாமதுரை / மதுரை பெயர்க்காரணம்

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். 

"மதுரை"

Photo: மாமதுரை /
மதுரை பெயர்க்காரணம் :

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். 

"மதுரை"

இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில..

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும். 

குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.

லேடீஸ் சேப்டி ஷாக்கர் - Ladies Safety Shocker

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மணிகண்டன் (20), பரத்கிரண் (20). டெல்லியில் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய கருவியை கண்டுபிடிக்க இம்மாணவர்கள் முடிவு செய்தனர். 15 நாட்கள் முயற்சியில் கருவியை செய்து முடித்துள்ளனர். 

Photo: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மணிகண்டன் (20), பரத்கிரண் (20). டெல்லியில் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய கருவியை கண்டுபிடிக்க இம்மாணவர்கள் முடிவு செய்தனர். 15 நாட்கள் முயற்சியில் கருவியை செய்து முடித்துள்ளனர். 

இதற்கு ‘லேடீஸ் சேப்டி ஷாக்கர்’ என பெயரிட்டுள்ளனர்.60 கிராம் எடையுள்ள இக்கருவியை பெண்கள் தலையில் கிளிப் போல் மாட்டிக் கொள்ளலாம். குடை, கீசெயின், செல்போன் பவுச் ஆகியவற்றிலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த கருவியில் 3 பேட்டரிகள் உள்ளன. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும். இந்த கருவியில் 2 பட்டன்கள் உள்ளன. முதல் பட்டனை அழுத்தினால் அபாய ஒலி எழுப்பும். இந்த ஒலி சுமார் 20 மீட்டர் தூரம் கேட்கும்.

கருவியை எதிரியின் உடலில் படும்படிவைத்து 2வது பட்டனை அழுத்தினால், அவர் மீது 1,700 வோல்ட் மின்சாரம் தாக்கிவிடும். இதனால் எதிரி நிலைகுலைந்துவிடுவார். ஆனால், அவரது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படாது. இக்கருவியை வெயிலில் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு.

An engineering student in Tamil Nadu has claimed that he has developed an electronic device that could help girls to protect themselves from molesters by benumbing the attacker temporarily.
 
Resembling a hair clip or mobile cover, the ‘Ladies safety shocker’, designed by second year Mechanical Engineering student VR Manikandan of private Kalasilingam University, can let out an electric shock at the press of a button, benumbing the attacker temporarily.
 
Manikandan said that the device, which is powered by a three volt battery which is re-chargeable with solar power, would also raise an alarm with a beep sound that can be heard in a radius of 20 metre. 
 
Manikandan says that concern over incidents of attacks on women such as gangrape prompted him to develop the device. He adds the device, which will cost around Rs 150, was developed along with his classmate Bharat Kiran.