Wednesday, April 25, 2012

எண் வகை திருமணங்கள்

மனு தர்ம சாஸ்திரப்படி, திருமணங்கள் 8 வகையாக பிரிக்கப் படுகிறது. அவை 
1. பிரஹ்ம விவாகம் : ஒரு ஆடவனுக்கு பிரமச்சரிய நிலை முடிந்த பிறகு, அவனது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு அனைவரின் விருப்புடன் நடப்பது.
2. தெய்வ விவாகம் : திருமண வயது வந்த பெண்ணுக்கு கோவிலில் உள்ள பூசாரிக்கு திருமணம் செய்து கொடுப்பது.
3. அர்ஷா விவாகம் : பெண்ணின் தந்தையின் விருப்பத்துடன், அவருக்கு பசு, காளை ஆகியவற்றை தானமாக கொடுத்து திருமணம் செய்து கொள்வது.
4. பிராஜபத்ய விவாகம்: இது பெண்ணின் தந்தை பெண்ணை ஆடவரின் கையில் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது.
5. காந்தர்வ விவாகம் : ஆண், பெண் இருவரும் விரும்பி,
பெற்றோருக்கு தெரியாமல் செய்வது.
6. அசுர விவாகம் : பெண்ணின் தந்தைக்கு பணம், பொருள் கொடுத்து பெண்ணின் விருப்பம் இல்லாமல் செய்வது.
7. ரக்க்ஷஷா விவாகம் : பெண், அவளது பெற்றோரின் விருப்பம் இல்லாமல் அனைவரின் முன்னிலையில், ஆண் தன் வீரத்தை காட்ட தூக்கி சென்று திருமணம் செய்வது.
8. பைஷச விவாகம்: பெண்ணுக்கு தெரியாமல், அவளை மயக்கம் அடைய செய்து திருமணம் செய்வது.

இதில் முதல் 4 சிறந்த விவாகம் என்றும், அடுத்து 4 முறையற்ற விவாகம் என்றும், ஒன்றை விட அடுத்த எண் தாழ்தது என்றும் கூறப்படுகிறது
.

No comments:

Post a Comment